சூர்யா நடித்த மாஸ் திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்திற்கு வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ‘மாஸ்’ என்ற டைட்டிலை மாசு’ என்று படக்குழுவினர் மாற்றினர். இருப்பினும் இந்த படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த உண்மையை நேற்று நடைபெற்ற ‘சாந்தன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் சினேகன் போட்டு உடைத்துவிட்டார்.
மாஸ் படத்திற்கு வரிவிலக்கு கொடுக்க மறுக்கப்பட்டதற்கு எத்தனையோ காரணங்கள் கூறியபோதிலும் உண்மையான காரணம் எது என்பதை அவர் இந்த விழாவில் தெரிவித்தார்.
‘மாஸ்’ படத்தில் ‘ஈழத் தமிழ் பேசுகிறவனா… உன்னை உதைக்க வேண்டும்’ என்று ஒரு வசனம் வருவதாகவும் அதை கோடிட்டு, “ஈழத்தமிழையும், ஈழத்தமிழர்களையும் கொச்சைப்படுத்துவதால் இப்படத்துக்கு வரிச்சலுகை கிடையாது” என்று ஓர் அதிகாரி கூறியதாகவும் சினேகன் கூறியுள்ளார். படக்குழுவினர் அந்த வசனத்தை மாற்றி, அந்த அதிகாரியிடம் போய் பேசியும் அந்த படத்திற்கு வரிவிலக்கு தர அந்த நேர்மையான அதிகாரி மறுத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
English Summary : Tax Exemption was denied for “Mass” film because of unnecessary dialogues.