தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை தோற்கடித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 411 ரன்கள் குவித்தது. ஆம்லா 159 ரன்களும், டீ பிளஸ்ஸிஸ் 109 ரன்களும் குவித்தனர்.

வெற்றி பெற 412 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி 45 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆம்லா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி 6 புள்ளிகளுடன் பி பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: South Africa beats Ireland by 201 runs. Hasim Amla and Faf du Plessis scored century.