அடிப்படை வசதிகள் அமைத்து கொடுக்க வேண்டி சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிக்கும் மாணவ மாணவியர்கள் சுமார் 200 பேர் பங்கு பெற்றனர். தரமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதி உள்பட அடிப்படை வசதிகள் வேண்டி அவர்கள் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.தாண்டவன் அவர்களின் அலுவலகம் முன் கோஷமிட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து துணைவேந்தர் ஆர்.தாண்டவன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்திற்குள் மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் இன்று முதல் தினமும் 10 மினரல் வாட்டர் கேன்கள் வரவழைக்கப்படும் என்றும் உறுதி கூறியதை அடுத்து இந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

English Summary:Madras University students goes strike for their basic needs in the college.