சென்னை, ‘தென்மேற்கு பருவமழை வரும் 21ம் தேதியுடன் முடிவுக்கு வரும்’ என வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. தென்மேற்கு பருவமழை மே 29ல் துவங்கியது. இந்த மழை வட மாநிலங்களில் செப்., மாதமே முடிவுக்கு வந்தது. ‘அக்., 8ல் வடகிழக்கு பருவமழை துவங்கலாம்’ என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.
ஆனால் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற்று அரபிக் கடலில் ‘லுாபன்’ மற்றும் வங்க கடலில் ‘தித்லி’ என இரண்டு புயல்களை உருவாக்கியது. தற்போது கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி உடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், சிவகங்கை 5 செ.மீ., உத்தமபாளையம் 4; கோவில்பட்டி, கொடைக்கானல் 3 செ.மீ., மழை பெய்துள்ளது.