சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜை தொடங்குகிறது. இதனையொட்டி அய்யப்பன் பக்தர்களின் வசதிக்காக சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று வெளியான செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாது:
1. சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் எண் 00627: நவம்பர் 20-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இதே ரயில் மறுமார்க்கத்தில் ரயில் எண் 00625: நவம்பர் 15, 22 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
2. எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் சுவிதா சிறப்பு ரயில்: ரயில் எண் 00626: நவம்பர் 15, 22 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. அய்யப்ப பக்தர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.
English summary-Ticket bookings begins for sabarimalai special train.