cmrl-3112015தீபாவளி பண்டிகையையொட்டி தென்னக ரயில்வே 12 சிறப்பு ரயில்களை அறிவித்திருக்கும் நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களும் தேவைக்கேற்ப சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பொதுமக்கள் அதிகளவில் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதால் காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் அதிகமாக வந்தால் கூடுதல் ரயில்களை இயக்கவுள்ளதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். தற்போதுள்ள காலஅட்டவணைப்படி கோயம்பேடு, ஆலந்தூரில் காலை 6 மணிக்கு முதல் ரயில் புறப்படும். இதுவே, ஞாயிறுகளில் முதல் ரயில் காலை 8 மணிக்கு முதல் ரயில் புறப்படுகிறது. அதேபோல், இரவு 10 மணிக்கு கடைசி ரயில் கோயம்பேட்டிலும், ஆலந்தூரில் இருந்தும் இயக்கப்படும். காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் அறிவிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதல் நேரங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந் தால், தற்போதுள்ள கால அட்ட வணையில் இருந்து தற்காலிக மாக மாற்றி காலையிலும், இரவு 10 மணிக்கு மேலும் மெட்ரோ ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தனர்.
English summary-CMRL to run special metro trains for this diwali