வரும் ஜூலை 1 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சாந்த்ராகாச்சி இடையே ஜனசாதாரணம் எனப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
02808 எனும் எண் கொண்ட இந்த சிறப்பு ரயில் சென்ட்ரலில் இருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.25 மணிக்கு சாந்த்ராகாச்சியைச் சென்று அடையும்.
சூளூர்பேட்டை, கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, எலுரு, தாதேபள்ளிகுடம், ராஜமுந்தரி, சாமல்கோட், அனகாபள்ளி, விசாகப்பட்டினம், விஜயநகரம், பிரம்மபூர், குர்தா சாலை, புவனேசுவரம், கட்டாக், பாத்ராக், பாலசூர், காரக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு ரயில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
English Summary : Special train from Chennai – Santragachhi from July 1st.