வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் – வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 5 -ஆம் தேதி இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 5 -ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06031) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06032) வேளாங்கண்ணியிலிருந்து செப்டம்பர் 6 -ஆம் தேதி காலை 8.50 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று (02.08.2023) முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *