spl-train-261115பயணிகளின் கூட்ட நெரிசல் மற்றும் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வரும் நிலையில் தற்போது சென்னை-திருநெல்வேலி வழித்தடத்தில் சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 11 மற்றும் 18ஆம்தேதிகளில் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06099) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து டிசம்பர் 13 மற்றும் 20ம் தேதிகளில் பகல் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 4.20 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். நெல்லையில் இருந்து வரும் சிறப்பு ரெயில், மாம்பலம் ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்படும்.

மேற்கண்ட ரெயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English summary-Special trains between Chennai Egmore – Tirunelveli