பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவில் மற்றும் கேரளத்துக்கு சிறப்பு கட்டண ரயில்கள் ஜனவரி 12 முதல் இயக்கப்படவுள்ளன.

1. தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041):

சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13ம் தேதி இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கத்தில்,

நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042):

ஜனவரி 16ம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021):

தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12ம் தேதி இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறு மார்க்கத்தில்,

திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022):

திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 13ம் தேதி மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டணம் ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

3. தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057):

ஜனவரி 16ம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறு மார்க்கத்தில்,

திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058):

திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

4. திருவனந்தபுரம் கொச்சுவேலி – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044):

கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17ம் தேதி காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில்,

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043):

தாம்பரத்திலிருந்து ஜனவரி 18ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

5. எர்ணாகுளம் – சென்னை சென்டரல் சிறப்பு கட்டண ரயில் (06046):

கேரளத்தின் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 12ம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

மறு மார்க்கத்தில்,

சென்னை சென்டரல் – எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரயில் (06045):

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஜனவரி 13ம் தேதி மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு அன்று நள்ளிரவு 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *