தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் பரவு நோயியல் துறையில் நடத்தப்படும் 6 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பரவு நோயியல் துறையில் 3 பட்ட மேற்படிப்புகளும், 4 பிரிவுகளில் முனைவருக்கான ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல் சுகாதார மேம்பாடு, கல்வி, பொது சுகாதார இதழியியல் ஆகிய முதுநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை www.tnmgrmu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்தை வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.