கடந்த 11ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானதை அடுத்து நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in / www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in / www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்

கடந்த மார்ச் மாதம் 19ஆம்தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதியுள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள் மற்றும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் ஆகியோர்களும் அடங்குவர்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை மறுநாள் முதல் 27ஆம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளி மூலமாக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 29 முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியரிடம் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்.

ஜூன் 4ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்தும் மாணவர்கள் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

English Summary: SSLC Exam results to be announced tomorrow. Retotalling and Revaluation to be applied on or before 29 of May, 2015.