தற்போதைய விஞ்ஞான உலகில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பெரும்பாலான பணிகள் சுலபமாக முடிக்கப்படுகின்றது. தியேட்டர் டிக்கெட், ரயில் டிக்கெட் முதல் வங்கி பரிமாற்றங்கள், வரி கட்டுவது வரை பல்வேறு அப்ளிகேஷன்கள் உதவியுடன் ஆண்ட்ராய்டு போன் மூலமே அனைத்து பணிகளும் எளிதாக முடிந்து விடுகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் ஐந்து புதிய அப்ளிகேஷன்களை எஸ்கேபி கல்வி குழுமங்களின் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை செய்துள்ளனர்.

எஸ்.கே.பி கல்வி நிறுவனம் கடந்த 10 மாதங்களாக 35 மாணவ, மாணவிகளை பல்வேறு குழுக்களாக பிரித்து ஆன்ராய்டு போன்களில் பயன் படுத்தப்படும் அப்ளிகேஷன்களை கண்டுபிடிக்க பயிற்சி கொடுத்தனர். இந்த பயிற்சியின் விளைவாக 5 முக்கிய அப்ளிகேஷன்களை மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பொறியியல் மாணவ, மாணவிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ஐந்து அப்ளிகேஷன்கள் குறித்து தற்போது பார்ப்போம்:

1. எமர்ஜென்சி ஸ்கீரின் சேவர்: அவசர காலங்களில் தொடர்பு கொள்ளக்கூடிய நபர்கள் என பெற்றோர், மருத்துவர்களின் பெயர், தொலைபேசி எண்கள் படத்துடன் ஸ்கிரீன் சேவராக பயன்படுத்த வேண்டும். எதிர்பாராத விதமாக நாம் விபத்தில் சிக்கினால், அங்கு வரும் மூன்றாம் நபர் நமது செல்போனில் உள்ள ஸ்கிரீன் சேவரில் உள்ள படத்தில் இருப்பவர்களிடம் எளிதாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க முடியும்.

2. மகளிருக்காக ‘ஸ்டே சேப்: இந்த அப்ளிகேஷன்: இதன் மூலம், பெண்கள் பயணிக்கும் ஆட்டோ, டாக்ஸியின் எண், பயணிக்கும் இடத்தை எஸ்எம்எஸ் மூலம் பெற்றோருக்கு தெரிவிக்க முடியும். அலாரத்தை பயன்படுத்தினால் வாகனம் பயணிக்கும் இடம் குறித்த தகவல் பெற்றோர்களுக்கு தானாகச் சென்றுவிடும்.

3. திருவண்ணாமலை: இந்த அப்ளிகேஷனின் பெயரே திருவண்ணாமலை என்பது தான். இந்த அப்ளிகேஷன் திருவண்ணாமலை நகருக்கு சுற்றுலா வரும் பக்தர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அண்ணாமலையார் கோயிலில் தினசரி, விசேஷ பூஜைகள், ஆசிரமங்கள், கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல் அடங்கிய வழிகாட்டியாக இது அமைந்துள்ளது.

4. பீட்பேக் மேனேஜ்மெண்ட் (Feedback Management): கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்த உண்மையான பின்னூட்ட தகவல்களை கல்லூரித் தலைவர் அல்லது முதல்வர் ஆகியோர் தனித்தனியாக தெரிந்துகொள்ள முடியும்.

5. ‘புக் சோஷியோ: இந்த அப்ளிகேஷன் மூலம் மாணவர்கள் தாங்கள் வைத்திருக்கும் புத்தகங்களை மற்ற மாணவர்களுக்கு விற்கவோ அல்லது வாங்கவோ முடியும். புத்தகங்கள் இல்லாமல் வேறு பொருட்களையும் வாங்கவும் விற்கவும் முடியும். இதன்மூலம் குறைந்த விலையில் யார் விற்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

கூகுள் பிளே ஸ்டோரில், SKP Engineering College என்ற உள்ளீடு உதவியுடன் இந்த 5 அப்ளிகேஷன்களை பொதுமக்கள் இலவசமாக தங்களது ஆன்ராய்டு போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

English Summary: New Mobile Apps is developed by SKP Engineering College Students. These Apps were really useful to Public.