தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 7243 செவிலியர் பணி நியமனத்திற்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய ஐந்து இடங்களில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 100 மதிப்பெண்கள் கொண்டதாக இந்த தேர்வு அமைந்துள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற பொது விண்ணப்பதாரர்கள் 35% மதிப்பெண்களும், எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்கள் 30% மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தமுள்ள 7,243 செவிலியர்களில் 6,792 பணிகள் பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனம் செய்யப்படுபவர்களுக்கு ரூ.7,700 அடிப்படை ஊதியமாக கிடைக்கும்.

இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

English Summary: Exam Dates Announced for Government Nurses Post.