சென்னை: 2018-19ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள், சிறப்பு பள்ளிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ம் தேதி தொடங்கி 22ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி:

10ம் தேதி (திங்கட்கிழமை) – தமிழ் முதல் தாள்
11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) – தமிழ் இரண்டாம் தாள்
13ம் தேதி (வியாழக்கிழமை) – ஆங்கிலம் முதல் தாள்
14ம் தேதி (வெள்ளிக்கிழமை) – ஆங்கிலம் இரண்டாம் தாள்
17ம் தேதி (திங்கட்கிழமை) – கணிதம்
18ம் தேதி (செவ்வாய்க்கிழமை) – விருப்ப பாடம்
19ம் தேதி (புதன்கிழமை) – அறிவியல்
22ம் தேதி (சனிக்கிழமை) – சமூக அறிவியல்

பிளஸ்-1

10ம் தேதி (திங்கட்கிழமை) – தமிழ்
11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) – ஆங்கிலம்
12ம் தேதி (புதன்கிழமை) – தகவல் தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14ம் தேதி (வெள்ளிக்கிழமை) – கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் அண்ட் டைட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (தொழிற்கல்வி).
17ம் தேதி (திங்கட்கிழமை) – இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி.
19ம் தேதி (புதன்கிழமை) – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், அலுவலக மேலாண்மை மற்றும் செக்கரட்டரிஷிப், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
22ம் தேதி (சனிக்கிழமை) – வேதியியல், கணக்குபதிவியல், புவியியல்.

பிளஸ்-2

10ம் தேதி (திங்கட்கிழமை) – தமிழ்
11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) – ஆங்கிலம்
12ம் தேதி (புதன்கிழமை) – தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்.
14ம் தேதி (வெள்ளிக்கிழமை) – கணிதம், வணிகவியல், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசியன் அண்ட் டைட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண்மை நடைமுறைகள், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (பொது).
17ம் தேதி (திங்கட்கிழமை) – இயற்பியல், பொருளியல், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் மற்றும் அப்ளையன்சஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி.
19ம் தேதி (புதன்கிழமை) – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு.
22ம் தேதி (சனிக்கிழமை) – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்.

இந்த தேர்வுகள் அனைத்தும், காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *