வழிகாட்டி கருத்தரங்கில் மாணவர்களுக்கு உளவியல் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் எந்த போட்டித் தேர்வை எழுதலாம் என்ன படிப்பை தேர்வு செய்யலாம் எந்த வேலைக்கு செல்லலாம் என்பது குறித்து ஆலோசனை முதன்முறையாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லுாரி உளவியல் பேராசிரியர் சுரேஷ்குமார் பேசுகையில், “மாணவர்களின் ஆர்வம், மனப்பான்மை நாட்டம் ஆகியன குறித்து உளவியல் ஆலோசனை சைக்கோ மெட்ரிக் தேர்வு வழங்குவது வளர்ந்த நாடுகளில் அதிகம் நடைமுறையில் உள்ளது.
ஆனால் இந்தியாவில் 2008 ம் ஆண்டில் வந்தது. மாணவர்கள் நலன் கருதி. மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான படிப்பை தேர்வு செய்ய இது பயன்படும்” என்றார்.