சென்னை: தேசிய கல்வி நிறுவனமான என்.ஐ.டி.,யில், எம்.சி.ஏ., படிப்பில் சேருவதற்கான ‘நிம்செட்’ நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., படிப்புகளில் சேர தேசிய அளவில் பல்வேறு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் எம்.சி.ஏ., படிப்பில் சேர ‘நிம்செட்’ எனப்படும் தேசிய மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு முடிக்க உள்ளவர்கள் வரும் கல்வி ஆண்டில் எம்.சி.ஏ., படிப்பில் சேர ‘நிம்செட்’ நுழைவு தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வு மே, 26ல் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் www.nimcet.in என்ற இணையதளத்தில் மார்ச், 1 முதல், 31க்குள் விண்ணப்பிக்கலாம்.