அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.
அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்தேர்வு நடத்த கடந்த 2013ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடையை எதிர்த்து மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த சீராய்வு மனு குறித்த விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கான இடைக்கால தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவித்துள்ளது.
English Summary: Supreme Court granted Permission to Entrance exam for Medical Education.