mozillaஇணைய பயனாளிகளுக்கு உதவும் வகையில் இண்டர்நெட் எக்ஸ்புளோர், கூகுள் குரோம் ஆகிய பிரவுசர் இருப்பினும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் பிரவுசராக மோசில்லா ஃபயர்பாக்ஸ் உள்ளது. இந்நிலையில் மோசில்லா நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் உதவும் வகையில் அதிவேகமாக செயல்படும் இணைய பிரவுசர் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

உலகின் முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான ‘பயர்பாக்ஸ்’ உலாவியை அறிமுகம் செய்த மோசில்லா நிறுவனம் தற்போது ‘மோசில்லா சர்வோ’ (Mozilla Servo) என்ற அதிவேகமாக செயல்படக்கூடிய மற்றொரு இணைய பிரவுசரை அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்தப் புதிய பிரவுசர் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து மோசில்லா நிறுவனம் உருவாக்கி வருகிறது.

‘ரஸ்ட்’ (Rust) எனப்படும் புதிய கணினி மொழியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட இந்த பிரவுசர், வரும் ஜூன் மாதம் சோதனை ரீதியாக அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

இந்த பிரவுசர் 64bit Linux, 64bit OSX, Android மற்றும் Gonk (Firefox OS) ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படக்கூடியதாக இருக்கும் என்றும், இது பயனாளர்களுக்கு இணைய தேடலில் புதிய அனுபவத்தை வழங்கும் என்றும் மோசில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary : Mozilla launches new high-speed browser