net12416கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான தகுதி தேர்வான ‘நெட்’ தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ என்னும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய இந்த தேர்வின் முடிவை http://cbsenet.nic.in/cms/public/home.aspx என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நெட் தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் நடத்தப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவு வெளிவந்துள்ள நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கானத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு http://cbsenet.nic.in/cms/public/home.aspx என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 12 முதல் அதாவது நாளை முதல் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

English Summary: June 2016 Net Exam Application from tomorrow. May-12th Last date.