சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் நகரங்கள் மற்றும் புதுச்சேரி – சாந்த்ராகாச்சி நகரங்கள் இடையே சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்ட்ரல் – எர்ணாகுளம் சுவிதா சிறப்பு ரயில்
ரயில் எண் 82613: ஜூலை 15-இல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
ரயில் எண் 82614: ஜூலை 17-இல் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
புதுச்சேரி – சாந்த்ராகாச்சி சிறப்பு கட்டண ரயில்
ரயில் எண் 06010: ஜூலை 9-இல் புதுச்சேரியில் இருந்து இரவு 7.15 மணிக்குப் புறப்பட்டு, ஜூலை 11-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சாந்த்ராகாச்சி சென்றடையும்.
இந்த ரயில் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, எலுரூ, தாதேபள்ளக்குடம், ராஜமுந்தரி, சாமல்கோட்டை, துவ்வாடா, சிம்மாச்சலம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் சாலை, பாலசா, பிரம்மபூர், குர்தா சாலை, புவனேஸ்வரம், கட்டாக், பாத்ரக், பாலசூர், காரக்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
English Summary :Suvidha special train from Chennai Central to Thiruvananthapuram