counselling-0014பொறியியல் கல்லூரிகளில் சேர கடந்த ஒரு வாரமாக ஒற்றைச் சாளர முறைப்படி சென்னையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிகளவிலான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து, தங்களுடைய விருப்பத்திற்கிணங்க பாடப்பிரிவையும், கல்லூரியையும் தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே தொடர்ந்து இருந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்தப் பிரிவை இதுவரை 4,331 மாணவ, மாணவிகள் தேர்வு செய்துள்ளனர்.
ஸ்பெஷல் கோட்டா பிரிவுகளின் கலந்தாய்வு முடிந்து பொதுப்பிரிவின் கலந்தாய்வு ஒரு வார காலம் முடிவடைந்துள்ள நிலையில், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 26,273 பேரில் 19,117 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். 7,081 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற 75 பேர் இடங்களைத் தேர்வு செய்யவில்லை.
சேர்க்கை பெற்றவர்களில் 4,331 பேர் இசிஇ பிரிவையும், பி.இ. கணினி அறிவியல் பிரிவை 3,167 பேரும், பி.இ. இயந்திரவியல் பிரிவை 3,102 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர். பி.இ. கட்டடவியல் தமிழ்வழி படிப்பை 45 பேரும், பி.இ. இயந்திரவியல் தமிழ்வழி படிப்பை 44 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர். இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கு சேர்க்கை ஜூலை 21-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary   :Engineering counseling. ECE Group greatly inspires students