சிம்பு நடித்த ‘வாலு’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி வெற்றி பெற்றதை அடுத்து நயன்தாராவுடன் சிம்பு நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தை விரைவில் முடிக்க படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். இந்த படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கியிருக்கும் நிலையில் நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர்.
நயன்தாரா தற்போது நானும் ரெளடிதான், திருநாள், காஷ்மோரா, மற்றும் தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக நடித்து கொண்டிருப்பதால் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு கால்ஷீட் தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்காக தான் கொடுத்த கால்ஷீட்டுக்களை படக்குழுவினர் வீணடித்துவிட்டதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கால்ஷீட் தரமுடியாது என நயன்தாரா கூறியதாகவும் செய்திகள் வெளிவருகின்றது.
இந்நிலையில் நயன்தாரா மீது திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்புவின் தந்தையும் இந்த படத்தின் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: “சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதற்காக நயன்தாராவுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் 75 சதவீத தொகையை கொடுத்து விட்டேன். மீதி 25 சதவீத சம்பளம் மட்டுமே அவருக்கு பாக்கி இருக்கிறது. படத்தில் இன்னும் 2 பாடல் காட்சிகள் படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நயன்தாராவின் மானேஜரிடம் இம்மாதம் ஐந்து நாட்களும், அடுத்த மாதம் ஐந்து நாட்களும் தேதி ஒதுக்கி தரும்படி கேட்டோம். அதற்கு நயன்தாரா மறுக்கிறார். பாடல் காட்சிகளை முடித்துக் கொடுத்ததும், அவருக்கு சேர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்து விடுகிறோம்.
நயன்தாரா ஒத்துழைப்பு கொடுத்து படத்தை முடித்துக் கொடுக்கும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட வேண்டும் என டி.ராஜேந்தர் தனது புகாரில் கோரியுள்ளார் டி.ராஜேந்தர். மேலும் நயன்தாராவிடம் சிம்பு கால்ஷீட் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் இந்தப் படத்தின் நடிகர் தான். தேவையில்லாத வதந்திகள் பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
English Summary:T.Rajendar Complaint on Nayanthara.