anirudh_ajithவளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய ‘3’ படத்தில் இருந்து தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த தனது அபார இசை அறிவால் குறுகிய காலத்திற்குள் அஜீத் மற்றும் விஜய் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு தனது திறமையை வளர்த்து கொண்டார். சமீபத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்த அனிருத் தற்போது அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

‘தல 56’ படத்திற்காக அனிருத் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், இந்த டியூன்களை சமீபத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் அஜீத்துக்கு போட்டு காட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அனிருத்தின் பாடல்களை கேட்டு அஜீத் மிகவும் உற்சாகமாகி அனிருத்தை பாராட்டியதாகவும், இந்த படத்திற்காக அனிருத்துக்கு கண்டிப்பாக விருது கிடைக்கும் என்றும் அவர் அட்வான்ஸாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற SIIMA விருது விழாவில் பேசிய அனிருத், ‘அஜீத் சார் படத்தில் இசையமைத்ததற்காக கண்டிப்பாக எனக்கு அடுத்த வருடம் SIIMA விருது கிடைக்கும் என நம்புகிறேன். அதற்காக நான் கடுமையாக உழைத்து கொண்டிருக்கின்றேன்’ என்று கூறியுள்ளார். அனிருத் இவ்வாறு கூறியதும் அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து அனிருத்தை வாழ்த்தினர்.

English Summary:In ajith movie will win award. Anirudh confidence.