ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருகிற்து. இந்த விலையில்லா லேப்டாப்புகள் ஒவ்வொரு வருடமும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் வழங்கப்படு வரும் நிலையில் இவ்வருடம் மட்டும் டிசம்பர் மாதத்திற்குள் கொடுக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து நேற்று சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், “விலையில்லா லேப்டாப் திட்டத்தின்கீழ் 33.19 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்படும் என அரசு 2011ம் ஆண்டு அறிவித்தது. இதற்காக 2011-12, 2012-13, 2013-14ம் ஆண்டுகளில் 22.19 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்பட்டுவிட்டன.

2014-15, 2015-16 காலகட்டத்தில் 11 லட்சம் லேப்டாப்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. லேப்டாப்கள் கொள்முதல் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, நான்காம் கட்ட லேப்டாப் வழங்கும் பணி அக்டோபர் மாதத்திற்குள்ளும், 5-ம் கட்ட லேப்டாப் வழங்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள்ளும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது“ என்று கூறியுள்ளார்.

வரும் 2016ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் இவ்வருடம் முன்கூட்டியே அரசு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கவுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து கூறப்படுகிறது.

English Summary : Minister announces that Free laptops will be distributed to students within December.