சென்னை: அக்.,5 முதல் 9 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகாவில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்திய வானிலை மையம் இன்று (அக்.,5) வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் : அக்.,5 – தமிழகம், புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவின் அனேக இடுங்களில் கனமழை முதல் மிக கனழை பெய்யும், கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திர கடலோர பகுதிகள், தெலுங்கானா, கர்நாடகாவின் உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.
அக்., 6 – தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு, கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதியில் சீற்றம் அதிகரித்து காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அக்.,7 – தமிழகம், கேரளாவில் மிக கனமழை முதல் மிக அதீத கனமழை பெய்யக் கூடும். கர்நாடகா, அந்தமான் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்.,8 – தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை முதல் மிக கனமழையும், கர்நாடவின் கடலோர பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அக்.,9 – தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை முதல் மிக கனமழையும், கர்நாடகாவின் கலோர பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும். அக்.,9 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.