இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: ஒடிசா முதல் தென் தமிழகம் வரை நிலப் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரண மாகவும், வெப்பச் சலனம் காரண மாகவும், தமிழகம் மற்றும் புதுச் சேரியில் அடுத்த இரு நாட்க ளுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதி யில் வானம் பொதுவாக மேகமூட் டத்துடன் காணப்படும். சில இடங் களில் லேசான மழை பெய்யக் கூடும்.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் 7 செமீ, கோவை மாவட்டம் வால்பாறையில் 6 செமீ, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை, பர்கூர், போச்சம்பள்ளி, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, விருதுநகர் மாவட்டம் வில்லிப்புத்தூர், சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.