தமிழ்நாடு அரசு, கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோர்களுக்கு மானிய உதவியுடன் ஊக்குவிப்பு வழங்குகிறது. புதிய கோழி, செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி பண்ணைகள் அமைப்பதன் மூலம் இறைச்சி, முட்டை உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொகை விபரங்கள்:
கோழி பண்ணை + குஞ்சு பொரிப்பகம் – ரூ. 25 லட்சம் வரை
செம்மறியாடு/வெள்ளாடு பண்ணை – ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை
பன்றி பண்ணை – ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை
தீவன சேமிப்பு, உற்பத்தி, வளர்ப்பு வசதிகள் – மானிய உதவி வழங்கப்படும்

தகுதி: தனிநபர்கள், SHG, FPO, JLG, விவசாய கூட்டுறவுகள் மற்றும் பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க:
[https://nlm.udyamimitra.in/](https://nlm.udyamimitra.in/)
மேலும் தகவல்: [http://www.tnlda.tn.gov.in/](http://www.tnlda.tn.gov.in/)

அருகிலுள்ள கால்நடை மருத்துவர்கள், அலுவலர்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *