சென்னை : அடுத்த மூன்று நாட்களுக்கு, தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக எல்லை யை ஒட்டிய, கர்நாடகா, கேரள மாநில பகுதிகளிலும், கிழக்கு கடலோர மாவட்டங்களிலும், வளி மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த மூன்று நாட்களுக்கு கடலோர பகுதிகள் உட்பட பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக, ராஜபாளையம், அவினாசியில், 11 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் 9; திண்டுக்கல் ஆண்டிபட்டி 8; பேரையூர்குன்னுார் 7; கோத்தகிரி, சின்னகல்லார், சோழவந்தான் 6 செ.மீ., மழை பெய்துள்ளது.