பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சனிக்கிழமை அன்று தமிழக அரசு பத்தாம் வகுப்பு தேர்வுக்கான நெறிமுறைகளை வெளியிட்ட நிலையில் நேற்று சென்னை உயர் நீதி மன்றம் பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மற்றும் விடுபட்ட பதினோராம் வகுப்பு தேர்வும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிக்கையில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கொண்டு 80 சதவீதமும், வருகை பதிவேட்டின் படி 20 சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.