கொரோனா சிகிச்சைக்காக நாள் ஒன்றுக்கு வசூலிக்கவேண்டிய கட்டணம் நிர்ணயித்து விவரத்தை தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அறிகுறிகள் இல்லாத மற்றும் லேசான அறிகுறிகளுடன் இருக்கும் நபர்கள் இருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தர பொது வார்டுக்கு ரூ.7,500 ம், மூன்று மற்றும் நான்காம் தர பொது வார்டுக்கு ரூ.5,000 ம் கட்டணம் வசூல் செய்யலாம் என்றும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15,000 ம் கட்டணமாக வசூல் செய்யலாம் என்று நிர்ணயித்துள்ளது.
மக்கள் நலன் காப்பதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும்.