திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழ்காணும் இணைய முகவரி மூலம் 15.06.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்: உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் – 127

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயதானது 18 முதல் 48 வரை இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்கலாம்.

ஊதியம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 14500 /- முதல் ரூ. 47500 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு – http://www.drbtvmalai.net/notification.php?id=202

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *