மத்திய அரசு வரும் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வழிபாட்டு தலங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை

  • அறிகுறிகள் இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
  • கொரோனா விழிப்புணர்வு குறித்த பதாகைகள் இருக்க வேண்டும். மேலும் விழிப்புணர்வு ஆடியோ மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட வேண்டும்.
  • உள்ளே செல்லும் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் வழி என தனித்தனியாக இருக்க வேண்டும்.
  • நுழைவாயில்களில் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் வைக்க வேண்டும். அத்துடன் வெப்ப அளவீடு செய்யும் கருவியும் வைத்திருக்க வேண்டும்.
  • வாகனங்கள் சமூக இடைவெளியுடன் நிறுத்த கோவில் நிர்வாகம் இடவசதிகள் செய்திருக்க வேண்டும்.
  • பக்தர்கள் தங்கள் காலணிகளை அவரவர் சொந்த வாகனங்களில் விட்டுவிட்டு வர வேண்டும். இல்லையென்றால் தனித்தனியே குடும்பம் வாரியாக வைத்துக்கொள்ளலாம்.
  • கோவில் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு மக்கள் தங்கள் கைகளை சோப்பால் கழுவ வேண்டும்.
  • வரிசையில் நிற்பவர்களுக்கு தரையில் 6 அடி சமூக இடைவெளியுடன் நிற்க குறியீடுகள் தரையில் அமைக்க வேண்டும்.
  • பக்தர்களுக்காக வளாகத்தினுள் இருக்கும் இருக்கைகள் சமூக இடைவெளியுடன் அமைக்க வேண்டும்.
  • வளாகத்தினுள் இருக்கும் குளிரூட்டப்பட்ட அறையில் அறிவிக்கப்பட்டுள்ள அளவீட்டை (24-30 செல்சியஸ்) பின்பற்ற வேண்டும். கற்று சுயற்சி முறையில் செல்ல வழிவகை செய்திருக்க வேண்டும்.
  • கோவிலில் இருக்கும் சிலைகள், சிற்பங்கள், புத்தகங்களை தொடுவதற்கு அனுமதி கிடையாது.
  • பஜனைகள் உள்ளிட்ட எந்த நிகழ்வுகளுக்கும் அதிக பக்தர்கள் கூடுவதற்கு அனுமதி கிடையாது.
  • அடுத்தவரை தொட அனுமதி கிடையாது.
  • வழிபாட்டில் ஈடுபடுவோர் தங்கள் சொந்த துணிகளை கொண்டு வந்து வழிபட வேண்டும். பின்னர் அவர்களே அதை கொண்டு செல்ல வேண்டும்.
  • பிரசாதம் அல்லது தீர்த்தம் உள்ளிட்டவற்றை நேரடியாக வழங்கக் கூடாது.
  • சமுதாய கூடங்கள், அன்னதானம் உள்ளிட்டவற்றில் பார்செல் செய்து சமூக இடைவெளியுடன் வழங்க வேண்டும்.
  • கழிவறைகள், கை – கால்கள் கழுவுமிடம் ஆகிய இடங்களை முறையாக பராமரித்து அங்கே சானிடைசர்களை வைக்க வேண்டும்.
  • வழிபாட்டு தலங்களை சுற்றி செயல்படும் கடைகள், உணவகங்களில் முறையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *