பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளார்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தேர்வுப் பணியில் சுமார் 2,21,654 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான பணியில் சுமார் 1,65,969 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கூறியதாவது;
- உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும்.
- மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
- 60% மாணவர்களை மட்டுமே சிறப்பு பேருந்தில் ஏற்ற வேண்டும்.
- 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும்.
- பொதுத்தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிற்கு அனுப்ப படுவர்.
- வீட்டிற்கு அனுப்பப்படும் மாணவர்கள் துணைத்தேர்வில் தேர்வுகளை எழுதி கொள்ளலாம்.
- காய்ச்சல் இருந்தாலும் மாணவர்கள் தேர்வு எழுத விரும்பினால் தனி அறையில் தேர்வு எழுத அனுமதி.
- அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.