2000px-TamilNadu_Logo.svg
தமிழகத்தின் பள்ளிக்கல்வி துறையில் உள்ள தொடக்க கல்வி மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் நடப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இன்னும் நடைபெறவில்லை. இந்த கலந்தாய்வு எப்போது நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்த நேற்று அரசாணை வெளியிடப்பட்டது. பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா இந்த ஆணையை வெளியிட்டார்.

இந்த அரசாணையில் ஆசிரியர் கலந்தாய்வு நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கலந்தாய்வு நடத்துவது குறித்த ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை செய்து வருகிறது. தொடக்க கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வு பணி எந்த தேதியில் நடத்தலாம் என அதன் இயக்குனர் இளங்கோவன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் தொடங்குவது குறித்து இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் இணை இயக்குனர்களிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.

இடமாறுதல் அரசாணை வெளியிடப்பட்டதை யொட்டி விரைவில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் இருந்து கவுன்சிலிங் தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளி கல்விக்கு இடமாறுதல் செல்லும் அலகு விட்டு அலகு மாறுதல் மட்டும் நடைபெறாது என்று கூறப்படுகிறது.

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடைபெற இருப்பதால் ஏற்கனவே தமிழகம் முழுவதும் இடமாறுதல் கேட்டு விண்ணப்பம் கொடுத்து காத்துக்கொண்டிக்கும் ஆசிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

English Summary:Teachers of the school of itamarutal GO Launch Conference