tourism20102015சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் இரண்டு மாதங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சி நடந்து வருவது வழக்கம். இந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெறவுள்ள சுற்றுலா, தொழில் பொருட்காட்சி நடத்த 4.40 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இந்த பொருட்காட்சியில் அரசு நிறுவன அரங்குகள் 100, தனியார் அரங்குகள் 400, வர்த்தக அரங்குகள் 500, சிறிய விற்பனை நிலையங்கள், கேளிக்கை அரங்குகள் மற்றும் நடமாடும் விற்பனை நிலையங்கள், பூங்கா ரயில், உணவு விடுதிகள், கலை அரங்குகள் என, பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும். டிசம்பர் 3வது வாரம் துவங்கி, 70 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியை சென்னை மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்து கண்டுகளிப்பர். அரங்குகள், விற்பனை நிலையங்களுக்கான ஒப்பந்தத்தில் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்பர். சிறிய அரங்குகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஒப்பந்தம் விடப்படும்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம், அரசுக்கு 5 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். இது மட்டுமின்றி, நுழைவு கட்டணம், இதர வகைகள் மூலமும் அரசு வருவாய் ஈட்டுகிறது. ஒப்பந்தப் பணி முடிந்து நவம்பர் இறுதியில் பொருட்காட்சி மைதானத்தில் அரங்குகள் அமைக்கும் பணி துவங்கும். டிசம்பர் இறுதியில் துவக்க விழா நடைபெறும். இந்த ஆண்டு பொருட்காட்சிக்கான ஒப்பந்தம் தற்போது கோரப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்ததில் பங்கேற்பது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’42வது சுற்றுலா பொருட்காட்சிக்கு 4.40 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த விண்ணப்பங்கள் www.tamilnadutourism.org, www.tenders.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள், அக்டோபர் 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார்.
English summary-tender agreement at Island Grounds cost of Rs.4.40 crores for exhibition.