actors-election-20102015நேற்று முன் தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி மற்றும் துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் விபரம் தற்போது வெளிவந்துள்ளது.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு சரத்குமார் அணியில் 24 உறுப்பினர்களும், விஷால் அணியில் 24 உறுப்பினர்களும் போட்டியிட்டனர். இதில் விஷால் அணியின் சார்பில் 20 உறுப்பினர்களும், சரத்குமார் அணியின் சார்பில் 4 உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

விஷால் அணியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்: அயூப்கான், கோவை சரளா, சங்கீதா, பால தண்டபாணி, பூச்சிமுருகன், ராஜேஷ், சோனியா, ஜுனியர் பாலையா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், குட்டி பத்மினி, பசுபதி, உதயா, பிரேம்குமார், ஸ்ரீமன், விக்னேஷ், பிரகாஷ், சிவகாமி

விஷால் அணியில் தோல்வி அடைந்தவர்கள்: காளிமுத்து, காமராஜ், ரத்தினசபாபதி, விஸ்வநாதன்

சரத்குமார் அணியில் வெற்றி பெற்றவர்கள்: ராம்கி, நிரோஷா, நளினி, டி.பி.கஜேந்திரன்

சரத்குமார் அணியில் தோல்வி அடைந்தவர்கள்: கே.ராஜன், எஸ்.என்.பார்வதி, ஆர்.ரவிக்குமார், மோகன் ராம், ஜாக்குவார்தங்கம், பசி சத்யா, கே.ஆர்.செல்வராஜ், பவன், எம்.ராஜேந்திரன், வி.சி.ஜெயமணி, எஸ்.எம். இசையரசன், எஸ்.பி.கலை மணி, திருச்சி எம்.எஸ்.முகமது மஸ்தான், நாமக்கல் ராஜா, சிசர் மனோகர், குமரேசன், சாந்தகுமார், ஐஸ் அசோக் ஆகியோர் தோல்வி அடைந்தார்கள்.
English summary-winners,losers list of recently held actors election.