டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 18 வயதுக்கு குறைந்த சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்ததால் சிறார் நீதி சட்டம் சமீபத்தில் திருத்தப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். இதன்படி 16 வயது நிரம்பிய சிறுவர்கள் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு பிறருக்கு கொடுக்கும் தண்டனையே வழங்கப்ப்டும் இந்நிலையில் 16 வயதுக்கும் குறைவான வயதில் இருப்பவர்கள் குற்றங்கள் செய்தால் அவர்களை கைது செய்யும்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் 1500 காவல் நிலையங்களில் விளம்பரப் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் கைது செய்யப்படும்போது அவர்களை காவல்துறையினர் எப்படி நடத்த வேண்டும்? எப்படி நடத்தக் கூடாது? என்பதை எடுத்துரைக்கும் வகையில் அனைத்து காவல் நிலை யங்களிலும் விளம்பரப் பலகை வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் சமீபத்தில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து 6 வகையான வண்ண போஸ்டர்கள் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
1. இளம் சிறார்களை கைது செய்யும்போது, அவர்களை சிறையில் அடைக்கக் கூடாது
2. விலங்கிடவோ, சங்கிலியால் பிணைக்கவோ கூடாது.
3. காவல் நிலைய அறை அல்லது சிறையில் வைக்கக் கூடாது.
4. கைது செய்த பிறகு அருகில் உள்ள குழந்தை நல அதிகாரியிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.
5. விசாரணை மேற்கொள்ள நன்னடத்தை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
6. கைது செய்யப்பட்ட தகவலை சிறாரின் பெற்றோருக்கு தெரிவித்தல் வேண்டும்
மேற்கண்ட தகவல்கள் அந்த வண்ணப் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன் கூறியதாவது:
நாங்கள் தயாரித்துள்ள போஸ் டர்கள் 1500 காவல் நிலையங் களிலும், 32 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும், 30 மாற்று தீர்வுமுறை மையங்களிலும், 32 சட்ட உதவி மையங்களிலும், 426 குற்றவியல் நீதிமன்றங்களிலும் விரைவில் வைக்கப்படவுள்ளன. காவல் நிலையங்களில் மட்டும் விளம்பரப் பலகையாக வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் போஸ்டராக ஒட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary: The boys will have to follow the rules when you are arrested. The Commission produced a poster.