trainசென்னை அரக்கோணம் வழித்தடத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளூரில் இருந்து திருவேலங்காடு வரையிலான ரயில்பாதையில் மார்ச் 9 ஆம் தேதி அதிவேக ரயில் சோதனை நடத்தப்படும் என்றும் இந்த சோதனைக்கு பின்னர் விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சோதனையை பெங்களூரைச் சேர்ந்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லூர் அடங்கிய குழுவினர் நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த அதிகவேக ரயில் சோதனையில் அதிகாரிகள் திருப்தி அடைந்தால் அதன்பின்னர் அவர்கள் கொடுக்கும் சான்றிதழின் அடிப்படையில் ரயில்போக்குவரத்து ஆரம்பிக்கப்படும்.

இந்த சோதனை நடைபெறும் மார்ச் 9 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வழித்தடத்தின் அருகே வசிப்போர் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்பாதையை கடக்க வேண்டாம் என்றும் குழந்தைகள் முதியோர்கள் ரயில்பாதை அருகே வர வேண்டாம் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: On March 9, the high-speed rail test tiruvelankadu to Tiruvallur.