matriculation8316அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்க வாய்ப்பே இல்லை என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது.

‘மாற்றம் இந்தியா’ என்ற அமைப்பின் இயக்குனர் நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் ‘2015-16-ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் தற்காலிக அங்கீகாரம் பெற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகள் மூடுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்படும் மாணவர்களை அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறித்தியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, பள்ளிக் கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “746 பள்ளிகளிலும் படிக்கும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிக அங்கீகாரம் நிபந்தனையின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்றும் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத அந்த பள்ளிகள் அனைத்துக்கும் வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் நீட்டிக்கப்படாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் 746 பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள தற்காலிக அங்கீகாரமானது மேலும் நீட்டிக்கப்படாது என உறுதியளித்ததை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

முன்னதாக அரசு நிர்ணித்த விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச நில அளவு, பிற கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத 746 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மே 31 ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படுவதற்கு பள்ளிக் கல்வித்துறை தற்காலிக அங்கீகாரம் வழங்கியது. இதுகுறித்து 2015 ஆகஸ்ட் 18 ஆம் தேதி இரு அரசாணைகள் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: No extension of the temporary authorization granted 746 Matriculation schools. The Government confirmed.