kalabhavanmani7316பிரபல மலையாள திரையுலக ஹீரோவும், தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் கலாபவண் மணி நேற்று திடீரென காலமானார். அவருக்கு வயது 45. கலாபவண் மணிக்கு நிம்மி என்ற மனைவியும், ஸ்ரீலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

நடிகர் கலாபவண் மணி கடந்த சில நாட்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்த வந்த நிலையில் திடீரென மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கலாபவண் மணியின் மரணத்திற்கு மலையாள, தமிழ் திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் உள்ள சாயல்குடியில் 1971ஆம் ஆண்டு பிறந்த கலாபவண் மணி சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் மிமிக்ரி கலைஞராக இருந்தார். பின்னர் முதலில் மலையாள படத்தில் அறிமுகமாகி சிறுசிறு வேடங்களில் நடித்தார். பின்னர் மலையாள திரையுலகின் குறிப்பிடத்தக்க ஹீரோவாக குறைந்த நாட்களில் மாறினார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள கலாபவண் மணி, சிறந்த நடிகருக்கான தேசிய விருது, கேரள அரசின் விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

ஜெமினி, ஜேஜே, ஏய், அந்நியன், ஆறு, புதிய கீதை,வேல், எந்திரன், உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தில் போலீசாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Sudden death the famous villain actor kalabhavan Mani.