பள்ளிகளில் கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர் வருகைப்பதிவு, அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறனை வளா்க்க, ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையை பள்ளிகளில் கொண்டுவர பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவர வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.