சாப்பிடும் பழங்களில் விஷமா..? இந்த பதிவின் தலைப்பை பார்த்த அனைவருக்குமே இப்படிபட்ட சந்தேகம் வந்திருக்கும். ஆனால், இது உண்மைதான். நாம் அன்றாடம் உண்ணும் பழங்களில் சில விஷ தன்மை நிறைந்துள்ளது என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த வகை பழங்களை சாப்பிட்டால் மெல்ல மெல்ல நம் உயிரை பறித்து விடும். பழங்களில் எது விஷ தன்மை கொண்டது என்பதையும், இதனால் உண்டாகும் பக்க விளைவுகளையும், இதை எவ்வாறு கண்டறிவது என்பதையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

பாதாம்: ஆரோக்கியம் நிறைந்த இந்த உணவில் எப்படி விஷ தன்மை இருக்கும் என்கிற கேள்வி இந்த பாதாமே விடை. நீங்கள் சாப்பிட கூடிய பாதாமில் சிறிது கசப்பு தன்மை கொண்ட பாதாம் இருந்தால் அதனை சாப்பிடாதீர்கள். ஏனெனில், இவை சைனைட் என்கிற விஷத்தன்மை கொண்டது. இதை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து நேரலாம்.

தக்காளி: இந்திய சமையலில் பிரதான உணவாக இருக்க கூடிய தக்காளியில் விஷயம் இருக்கிறதாம். தக்காளி பழத்தில் விஷம் கிடையாது. ஆனால், இதன் இலைகள், தண்டு பகுதி போன்றவற்றில் நச்சு தன்மை இயற்கையிலே உள்ளதாம். எனவே, சமைக்கும் போது தவறி கூட இதை பயன்படுத்தி விடாதீர்..!

ஆப்பிள்: விஷ தன்மை ஆப்பிளிலும் உள்ளது. ஆப்பிளை முழுவதுமாக எப்போதுமே சாப்பிட கூடாது. காரணம் இதன் விதை தான். சைனைட் என்கிற நச்சு தன்மை இதன் விதையில் அதிக அளவில் உள்ளது. ஆதலால், இதை எப்போதுமே நீக்கி விட்டு தான் சாப்பிட வேண்டும். இல்லையேல் மரணம் கூட நிகழலாம்.

முந்திரி: உணவின் சுவையை கூட்டவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் முந்திரி பயன்படுகிறது. எல்லோருக்குமே உணவில் சேர்க்கும் முந்திரியை விட அதை வெறுமையாக சாப்பிடுவதே பிடிக்கும். அப்படி சாப்பிடுகையில் அவை வேக வைத்து உள்ளதா என்பதை அறிவது அவசியம். ஏனெனில், முந்திரியை வேக வைக்காமல் சாப்பிட்டால் அதில் உள்ள நச்சு தன்மை கொண்ட உருஷியோல் என்ற வேதி பொருள் விஷத்தை உடல் முழுவதும் பரப்பி விடும். ஆதலால், பச்சையாக உள்ள முந்திரியை சாப்பிடாதீர்கள்.

செர்ரி: சிவப்பு நிறத்தில் அனைவரையும் கவர கூடிய பழம் தான் செர்ரி. இதை பச்சையாகவோ, வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடலாம். ஆனால் ஒரு போதும் இதன் விதையை மட்டும் மென்று விட கூடாது. இதில் ஹைட்ரஜன் சைனைட் அதிக அளவில் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மீறி சாப்பிட்டால் இதய பாதிப்பு, உறைய இரத்த அழுத்தம், மயக்கம், வாந்தி போன்றவையும், சில சமயங்களில் கோமா நிலைக்கே கூட சென்று விடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *