இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை பட்ட படிப்புகளான பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யூ.எம்.எஸ்., பி.என்.ஒய்.எஸ்., பி.எச்.எம்.எஸ். போன்ற பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவமனை வளாகத்தில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
25ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை: அனைத்து சிறப்பு பிரிவினருக்கும் கட்-ஆப் மதிப்பெண் 197.00 முதல் 190.00 மற்றும் 189.75 முதல் 184.00 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்
26ஆம்தேதி திங்கட்கிழமை: காலை கட்-ஆப் மதிப்பெண் 183.75 முதல் 179வரை பிற்பகல் 178.75 முதல் 174.00 வரை உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்
27ஆம்தேதி காலை கட்-ஆப் மதிப்பெண் 173.75 முதல் 165.00 வரையும், பிற்பகல் 164.75 முதல் 154.00 வரையும் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்
28ஆம் தேதி: காலை கட்-ஆப் மதிப்பெண் 153.75 முதல் 138.00 வரையும், பிற்பகல் 137.75 முதல் 100.00 வரையும் உள்ளவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
அனைத்து மாணவர்களுக்கும் அழைப்பு கடிதம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தங்களுக்குரிய கட் ஆப் மதிப்பெண்ணுக்குரிய தேதியில் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாது.
மேலும் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது விண்ணப்பபதிவு எண் (ஏ.ஆர்.எண்) மற்றும் பிறந்த தேதியினை குறிப்பிட்டு அழைப்பு கடிதத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
மேலும் அசல் சான்றிதழ்களும், தற்சமயம் படித்து வரும் கல்லூரியில் ஆளறிச் சான்றிதழ் பெற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 10-10-2015 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ சென்னையில் மாற்றத்தக்க வகையில், “Director of Indian Medicine and Homoeopathy, Chennai-106” என்ற பெயரில் ரூ.5500க்கு டி.டி. பெற்று கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary:The Counseling of Indian Medicine and Homoeopathy Medical courses Date Announced.