vedhalamஅஜீத், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘வீரம்’ சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேதாளம்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ‘வேதாளம்’ சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குனர் ‘வீரம்’ சிவா மற்றும் பாடலாசிரியர் மதன்கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டு இந்த படம் குறித்த சில தகவல்களை தெரிவித்தனர். அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கூறியதை தற்போது பார்ப்போம்

இயக்குனர் சிவா: வேதாளம் படத்தின் கதையை அஜீத் சார் அவர்களை மனதில் வைத்துதான் எழுதினேன். இந்த படத்தில் அவருடைய பாடி லாங்குவேஜ், மேனரிசம் ஆகியவற்றை முழு அளவில் அவருடைய ரசிகர்கள் பார்த்து மகிழலாம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் படம், அனைத்து வயதினர்களும் ரசிக்கும்படியான ஒரு படம் இருக்கும் என்று உறுதி தருகிறேன். இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் ‘வேதாளம்’ என்ற கேரக்டர் ஒரு தரலோக்கல் கேரக்டர். இந்த கேரக்டருக்காக அஜீத், இறங்கி அடித்துள்ளார்’

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்: ‘வேதாளம்’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத்தான் தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் அஜீத் இந்த படம் தீபாவளுக்கு வரவேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் இரவுபகலாக பணிபுரியவும் ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த முழு ஒத்துழைப்பால்தான் இந்த படம் தீபாவளி ரிலீஸ் ஆவது சாத்தியமாகியுள்ளது.

மதன் கார்க்கி: என்னுடைய நண்பர்கள் பலர் ஏன் இன்னும் அஜீத் சார் படத்திற்கு பாட்டு எழுதவில்லை என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். எனக்கும் அந்த குறை மனதில் இருந்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்கு பாட்டு எழுதியதன் மூலம் அந்த குறை நீங்கிவிட்டது என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஆலுமா டோலுமா’ பாடல் உருவாக்கப்பட்ட விதம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி அஜீத் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

English Summary: Ajith score down for Vedhalam Movie. Director Siva.