tungavanamஉலக நாயகன் கமல்ஹாசன், த்ரிஷா நடித்துள்ள ‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு மிகக்குறுகிய காலமான 38 நாட்களில் முடிக்கப்பட்டு தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளி திருநாளில் இந்த படம் வரும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

மேலும் 2015ஆம் ஆண்டில் கமல் நடிப்பில் வெளியாகவுள்ள மூன்றாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இதே வருடத்தில் உத்தமவில்லன், பாபநாசம் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் மொத்தம் 127 நிமிடங்கள் அதாவது 2 மணி 7 நிமிடங்கள் ஓடும் என்று இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ள அட்மாஸ் எண்டடெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் தூங்காவனம்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் வெறும் 1மணி 38 நிமிடங்கள் என்று ஒரு வதந்தி தவறாக இணையதளங்களில் பரவி வருவதாகவும், அந்த தகவல் உண்மையில்லை என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், யூகிசேது, மதுமிதா, ஆஷா சரத் மற்றும் பலர் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

English Summary:’Tunkavanam’ running time of the film to the description of the rumor.