polytechnic1051610ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் வரும் 25ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளிவந்ததுல் ஒருசில மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்புவார்கள் இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி அவர்கள் முக்கிய உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

பொறியியல் பாடத்தில் டிப்ளமா படிப்புகள் வழங்கும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 2016-17-ம் கல்வி ஆண்டுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரத்தை பெற்றிருந்தால் மட்டுமே இந்த கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.

2016-17-ம் கல்வி ஆண்டுக்கு ஏஐசிடிஇ அங்கீகாரம் புதுப்பிக்கப் படவில்லை என்றால் முதல் ஆண்டில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெறாமல் மாணவர்கள் சேர்க்கப்பட்டால் அந்த மாணவர் சேர்க்கைக்கு கண்டிப்பாக அனுமதி அளிக்கப்படாது. மேலும், செமஸ்டர் தேர்வுக்கு பதிவு செய்யவும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எனவே 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேருவதற்கு முன்னர் அந்த கல்லூரி (ஏஐசிடிஇ) அங்கீகாரத்தை பெற்றுள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னர் சேருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

English Summary: The main directive to self-financed polytechnic principals.