pt10516தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பிரபல ஊடகங்கள் கணித்த கருத்துக்கணிப்புகளை நேற்று பார்த்தோம். இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி எடுத்த கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் நேற்றிரவு வெளிவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி அதிமுக ஆட்சி மீண்டும் தொடர்வதாகவும் எதிர்க்கட்சியாக திமுக வரும் என்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்கள் நலக்கூட்டணிக்கு ஒற்றை இலக்க எண்களில்தான் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பிடிப்பது யார் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சியும், ஏபிடி நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் பின்வருமாறு: அதிமுக 164 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும். திமுகவுக்கு 66 இடங்களும், பிற கட்சிகளுக்கு 4 தொகுதிகளும் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அதிமுகவுக்கு 38.58 சதவீதம், திமுக அணிக்கு 32.11 சதவீதம், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணிக்கு 8.55 சதவீதம், பாமகவுக்கு 4.47 சதவீதம் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 2.12 சதவீதமும், பாஜகவுக்கு 1.96 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீங்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்‌ற கே‌ள்விக்கு ஜெயலலிதா என 39.66 சதவிகிதம் பேரும், கருணாநிதி என்று 31.‌89 சதவி‌கிதம் பேரும் பதிலளித்துள்ளனர். விஜயகாந்துக்கு 8.‌59 சதவிகிதம் பேரும், அன்பும‌ணிக்கு 5.03 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்த நிலையில், சீமான் 2.4 சதவிகிதம் என்றும்‌ யாருமில்லை‌ என 3.02 சதவிகி‌தம் பேரும் கூறியதாக அந்த தொலைக்காட்சி அறிவித்துள்ளது. மீண்டும் ஆட்சி ‌அமைக்க அதிமுகவுக்கு வாய்ப்பளிப்பீர்களா என்ற கேள்விக்கு 51.68 சதவிகிதம் பேர்‌ இல்லை என்றும், 42.69 சத‌விகி‌தத்தினர் ஆம் என்றும், இதர கரு‌த்துகளை 1.16 சதவீதத்தினரும், தெரியாது என 4.47 சதவீதத்தினரும் பதிலளித்தனர். அதிமுக ஆட்சி அமைக்க மீண்டும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ள 51.68 சதவிகிதத்தினர்களின் வாக்குகள் பலவாறாக பிரிவதால் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கவுள்ளதாக இந்த கருத்துக்கணிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

English Summary: Who is the next ruler of Tamilnadu. Pudiyathalaimurai polling Results.