வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ‘கிரேடு-பி’ தரத்திலான ஒப்பந்த அடிப்படையிலான 60 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் துறைவாரியான ரகாலியிடங்கள் விவரம்:
பணி Specialists in Grade ‘B’
1. Finance – 14
2. Data Analytics – 14
3. Risk Modelling – 12
4. Forensic Audit – 12
5. Professional Copy Editing – 04
6. Human Resourse Management – 04
வயது வரம்பு: 24 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 01.08.1984 மற்றும் 01.08.1994 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தகுதி: எம்.பி.ஏ. (நிதி), புள்ளியியல் முதுகலை பட்டம், இதர முதுகலை பட்டத்துடன் பணி சார்ந்த துறைகளில் டிப்ளமோ படிப்புகள், சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.09.2018
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.09.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.