இளையதளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மிகச்சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்,ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சிம்புதேவன், தேவிஸ்ரீபிரதாத் போன்ற படக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலை 6.30 மணியளவில் ஆரம்பமான இந்த விழா சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.
இந்த விழாவில் விஜய்யின் பேச்சு ஹைலைட்டாக இருந்தது. அவரது படங்களில் வரும் பஞ்ச் டயலாக்குகள் போலவே அவரது பேச்சு அமைந்திருந்தது. அவர் பேசியதில் இருந்து சிலவற்றை இப்போது பார்ப்போம். “எனக்கு உண்மையாக ஒருவரை வெறுக்க தெரியும். ஆனால் பொய்யாக ஒருத்தரை நேசிக்க தெரியாது. திருட்டு டிவிடி எனப்படும் பைரஸி என்பது பிரசவம் ஆகிற குழந்தையை சிசேரியன் பண்ணி கொல்றதுக்கு சமம். அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாதது நமது வாழ்க்கை. இருக்குற வரைக்கும் எல்லாரையும் சந்தோஷப் படுத்தனும்.
எனக்கும் என் ரசிகர்களுக்கும் மத்தவங்களை வாழ வச்சிதான் பழக்கம். என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள்தான் இருக்கிறது. அதான் உங்க எல்லாருக்கும் தெரியுமே. பின்னாடி பேசறவங்களை பத்தி எனக்கு கவலை இல்லை. நான் என்னுடைய தோல்வியில் இருந்து நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன் மேலும் இந்த விழாவில் இயக்குனர் டி.ராஜேந்தர் தன்னுடைய எதுகை மோனை பாணியில் சுமார் 15 நிமிடங்கள் பேசினார். அவர் பேசியதில் இருந்து சிலவற்றை பார்ப்போம். “”விஜய் ஒரு தூய்மையான உள்ளம் கொண்டவர். ஒவ்வொரு தமிழனின் மனதிலும் அவர் நிற்கிறார். விஜய் எனக்கு புடிச்ச ஒரு தமிழன். நல்ல நண்பன். விஜய்கிட்ட இருக்கிறது நட்பு, நான் பார்க்கல அவர்கிட்ட தப்பு. சிம்புவுக்கு ஒரு அண்ணா மாதிரி இருக்கிறது விஜய் தான். இதான் உண்மை. உணவு நல்லா இருக்கணும்ன்னா தேவை உப்பு, உறவு நல்லா இருக்க தேவை நட்பு.
தம்பி விஜய் உன்னிடம் இல்லை தலைக்கணம். நீ பேசமாட்ட வசனங்கள் கத்தி, நீ நடிச்ச படம் பேரு கத்தி, இதுக்குத்தான் ரசிகர்கள் இருக்காங்க உன்ன சுத்தி’ மேலும் இந்த விழாவில் நடிகைகள் ஸ்ருதிஹாசன், நந்திதா, ஹன்சிகா, ஸ்ரீதேவி, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்புதேவன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, ஜீவா மற்றும் பலர் பேசினர்.
English summary :There’s a lot behind my success insults . Vijay